அம்மா,
10 மாதம் நானிருக்க உன் கர்ப்பபையையே இனாமாக கொடுத்தவள் நீ,
பிறந்த பிறகு நானிருக்க சிறிதளவு இடம் கூடவா இல்லை நம் வீட்டில்,
ஈவு இரக்கமின்றி குப்பை தொட்டிக்கு என்னை தத்துக்கொடுத்தாய்,
என் குற்றம் யாது அம்மா ??????
நான் சுமக்கும் போது வயிற்றில் உதைத்தவன் என்னை சுமக்கும் காலம் வந்ததும் நெஞ்சில் உதைப்பான் என்று எண்ணிவிட்டாயோ????
அம்மா.........
என் பசி தீர்க்க அருகினில் நீயில்லை அம்மா,
ஒருநொடி நானும் தாயகினேன் எறும்புகளுக்கு என் சதையை இரையாக கொடுத்ததினால்,
நான்கு கால் மிருகம் ஒன்று தன் குட்டிகளுக்கு பால் கொடுப்பதைக் கண்டேன்..........
என் பசியை ஆற்ற யார் மடியை நான் நாடுவேன் அம்மா....... ஒருவகையில் நானும் வாய் இல்லாத ஜீவன் தானே............
உடம்பெல்லாம் வலிக்குது அம்மா !!!!!!!
வெறி நாய்களுக்கு இனிமேலயும் என்னால் விளையாட்டு பொம்மையாக முடியாது........
மனித பிறவி எனக்கு கிடைத்த சாபம் போலும்......
இன்னொரு பிறவிக்கொண்டு பிறப்பேன் நான்கு கால் மிருகமாக..............
செல்கிறேன் அம்மா !!!!!!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக