செவ்வாய், 12 ஜூலை, 2011

நட்பிற்கு நன்றி !!

கண்ணாம்பூச்சி ஆடின மகிழ்ச்சியும் கவலையும் ,
மகிழ்ச்சி ஓடி ஒழிந்தது........கவலை என்னை வந்து அடைந்தது,
பயம் என்னை விடாமல் துரத்தியது ,
தரையில் விழுந்தேன் ,சிரிப்பதை மறந்தேன்,அழுவதை தொடர்ந்தேன்,
ஒரு கரம் நீண்டது ;
என் கண்ணீர் தரையில் விழுவதற்குள் தாங்கி பிடித்தது ...........
நட்பிற்கு நன்றி...........

என்றென்றும்  தாங்குவேன் உன்னை என் தோளில்......என் உயிரோடு சுவாசம் ஒட்டி இருக்கும் வரை...

பேனா கேட்டது !!!

என் பேனா என்னைப் பார்த்து கேட்டது
கவிதையாய் எழுதி தள்ளுகிறாயே உனக்கென்ன காதல் தோல்வியா என்று.........

நமது நட்பு !!!!!!!!

சொந்தம் பல வந்தாலும் பந்தம் பல சேர்ந்தாலும் நமது நட்பு எனும் பூங்காவில் பூ பூத்துக் கொண்டேதான் இருக்கும்.....
என் உடலோடு உயிர் ஒட்டி இருக்கும் வரையில்....

நெஞ்சம் சாகும் அம்மா ♥

லஞ்சம் கொடுக்காமல் பஞ்சம் பாராமல் என்னுள் நிரந்தரமாய் தஞ்சம் புகுந்து,பாச மழையால் என் விழிகளை கொஞ்சம் ஆசரவைத்து,
மெல்ல சிரிக்கும் என் அழகு தேவதையே,
கையூட்டு இல்லாமல் இவ்வுலகில் நான் பெற்ற ஒரே அதிசயம் நீ தான்
அம்மா........
உன் நெஞ்சம் நோகுமானால் என் நெஞ்சம் சாகும் அம்மா ♥

நிதி vs விதி.......

நண்பன் காதலன் ஆவது இயற்கையின் நிதி,
காதலன் நண்பன் ஆவது வாழ்க்கையின் விதி.......

கனவிலாவது காண !!!!!!!!!

கண்கள் மூடி காத்துக் கிடந்தேன்
நிஜத்தில் காண முடியாத உன் பிம்பத்தை
கனவிலாவது காண..........

பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

நீ பிறந்த வருடம் உன்னைக் கடந்து சென்றாலும்,
உன் வருகையை ஏந்திய மாதமும் திகதியும் உன்னை ஒருபோதும் மறந்தது கிடையாது ,
வருடத்திற்கு ஒரு முறை காலேண்டர் எனும் பூங்காவில் பூத்துக் கொண்டுதான் இருக்கிறது உனது பிறந்தநாள்.......
மகிழ்ச்சியுடன் நீ கொண்டாடுவதற்கு அல்ல ,
உன்னை ஜனித்த தாயை கை எடுத்து கும்பிடுவதற்கு...........
பிறந்த நாள் வாழ்த்துக்கள்......

ஒரு சிசுவின் அழுகுரல்!!!!!!!!!!!!


அம்மா,
10 மாதம் நானிருக்க உன் கர்ப்பபையையே இனாமாக  கொடுத்தவள் நீ,
பிறந்த பிறகு நானிருக்க சிறிதளவு இடம் கூடவா இல்லை நம் வீட்டில்,
ஈவு இரக்கமின்றி குப்பை தொட்டிக்கு என்னை தத்துக்கொடுத்தாய்,
என் குற்றம் யாது அம்மா ??????
நான் சுமக்கும் போது வயிற்றில் உதைத்தவன் என்னை சுமக்கும் காலம் வந்ததும் நெஞ்சில் உதைப்பான் என்று எண்ணிவிட்டாயோ????
அம்மா.........
என் பசி தீர்க்க அருகினில் நீயில்லை அம்மா,
ஒருநொடி நானும் தாயகினேன் எறும்புகளுக்கு என் சதையை இரையாக கொடுத்ததினால்,
நான்கு கால் மிருகம் ஒன்று தன் குட்டிகளுக்கு  பால் கொடுப்பதைக் கண்டேன்..........
என் பசியை ஆற்ற யார் மடியை நான் நாடுவேன்  அம்மா.......  ஒருவகையில் நானும் வாய் இல்லாத ஜீவன் தானே............
உடம்பெல்லாம் வலிக்குது  அம்மா !!!!!!!
வெறி நாய்களுக்கு இனிமேலயும் என்னால் விளையாட்டு பொம்மையாக முடியாது........
மனித பிறவி எனக்கு கிடைத்த சாபம் போலும்......
இன்னொரு பிறவிக்கொண்டு பிறப்பேன் நான்கு கால் மிருகமாக..............

செல்கிறேன் அம்மா !!!!!!!!!   

கண்கள் <> <>


உன் ஒவ்வொரு வெற்றிக்கும் என் கண்கள்  கைத் தட்டின,
உன் ஒவ்வொரு தோல்விக்கும் என் கண்கள்  நீர் சிந்தின ,
உன் வருகைக்காக வழிமேல் விழுந்துக் காத்துக் கிடந்தன,
என்னைவிட என் கண்கள் தான் உன்னை அதிகம் நேசிகின்றன ,
உன்னை முதன்முதலில் சந்தித்தது அவைகள் தானே........

மாயை !!!!!

விளிமூடியும் உறக்கமின்றி நிதானத்தில் இருப்பாய்,
பசி மறந்து தியானத்தில் கிடக்கும் துறவியாய் ஆவாய்,
வாரிய கூந்தலைக் கலைத்து மீண்டும் மீண்டும் கோதுவாய்,
ஆடையில் உள்பகுதி எது வெளிபகுதி எது என்று போராட்டம் நடத்துவாய் ,
வீட்டு கண்ணாடி முகம் சுளிக்கும் அளவிற்கு நிமிடத்திற்கு ஒரு முறை உன் தோற்றத்தைக் காணுவாய் ,
கிணற்றில் தண்ணீரை எடுத்து குடத்தை நிரப்பாமல் தரையை ஈரமாக்குவாய் ,
செவிகிழியும் விறு விருப்பான பாடல்களில் இருந்து மனம் குளிரும் மெல்லிசைக்கு மாறுவாய் ,
சுவற்றில் உள்ள சுண்ணாம்பை விரல் நுனியால் பிய்த்து எடுப்பாய் ,
கை விரல் இவ்வாறு இருக்க கால் விரல் மட்டும் என்ன விதிவிளக்கா,
வாசல் தெளித்து புள்ளி வைக்காமலே கோலம் போடும்........கேட்டால் நாணம் என்பாய்,
உனது நிழலோடு ஒரு நிழல் சேர்ந்து இரட்டையாக விழுவதாய் உணர்வாய் ,
ஒவ்வொரு பற்களிலும் சிரிப்பாய்,
தனிமையில் இனிமையாய் காணுவாய் ,
இனிமையிலும் உனது கற்பனையை சொர்பனமாய் உணர்வாய் ,
நண்பர்கள் எதிரிகளாக தெரிவர்.....விலகி ஓடுவாய்  ,
கையில் ஒரு ரோஜாவை ஏந்தி நித்தம் நடிகனைப் போல் ஒத்திகை பார்ப்பாய்,
மனதில் கவியலை பெருக்கெடுத்து ஓடும்......இதயக்கரையை வந்து வந்து மோதும்,
எதற்கும் துணிந்தவனான உனக்குள் இனம்புரிய நடுக்கம் அறிவாய்,
வானிலை மாற்றம் கூட உனக்கு எதிர்மறையே-
குளிர் காலத்தில் வியர்த்து , வெயில் காலத்தில் நடுங்கும் அதிசய பிறவி ஆவாய் ,
காகிதப் பூவிலும் வாசத்தை உணரும் உனது மூக்கு,
வானத்தில் ஜோடி விண்மீன்களை இடைவிடாது தேடும் உனது கண்கள் ,
காயத்ரி நாமத்தைப் போன்று ஏதோ ஒன்றை தொடர்ந்து உச்சரிக்கும் உனது உதடுகள்,
மொத்தத்தில் நீ ஒரு கவிஞன் ஆவாய்.
கொடிய நோய் என்று அஞ்சிவிட வேண்டாம் ,
காதல் என்ற மாயை உனக்குள் புகுந்து விட்டதன் அறிகுறிகள் தான் இவை!!!!!!!!!!!!!!

புதன், 6 ஜூலை, 2011

வெற்றி நிச்சயம்



உள்ளங்கையை மடக்கு
அதற்குள் உனது முயற்சி எனும் முலாதரனை பதுக்கு,
எண்ணங்களை மனதின் ஓரம் கிறுக்கு ,
மதிக்கு வேலை கொடு ........உணர்சிகளுக்கு பூட்டு போடு,
தோல்விகளுக்கு வணக்கம் கூறு.......அவை உனது ஆசிரியர்கள்,
வெற்றிகளுக்கு நன்றி கூறு அவை உந்தன் தூண்டுகோல்கள்
வெறித்தனமாய் உன் லட்சியத்தை விடாது துரத்து,
ஒளிமயமான எதிர்காலம் உனது காலடியில் சரணடையும்!!!!

பேனா கேட்டது

என் பேனா என்னைப் பார்த்து கேட்டது
கவிதையாய் எழுதி தள்ளுகிறாயே உனக்கென்ன காதல் தோல்வியா என்று.........

சிறந்த கவிதை

கவிதை எழுத பேனாவை எடுத்தேன்,
உனது பெயரை கிறுக்கினேன்,
அதைவிட சிறந்த கவிதை இவ்வுலகில் உண்டோ........

நட்பு

சொந்தம் பல வந்தாலும் பந்தம் பல சேர்ந்தாலும் நமது நட்பு எனும் பூங்காவில் பூ பூத்துக் கொண்டேதான் இருக்கும்.....
என் உடலோடு உயிர் ஒட்டி இருக்கும் வரையில்....


செவ்வாய், 5 ஜூலை, 2011

கண்கள்!!!

உன்னை வெறுக்கிறேன் என்று என் உதடுகள் பொய் சொல்லின,


உன்னை மட்டும்தான் காதலிக்கிறேன் என்று என் கண்கள் காட்டிக் கொடுத்தன ............

யார் உண்மையானவர்?

கஷ்டம் என்று சொன்னால் ......
அன்புடன் ஆதரிப்பார் அம்மா,
அறிவுரை கூறுவார் அப்பா,
பலன் எதிர்பாராது தோள் கொடுப்பான் தோழன்,

"முத்தம் கொடு" என்பான் காதலன்
தன்னலம் மட்டும் கருதி !!!!!!!!!!!!!!!

இப்படியும் ஒரு காதல்>>>>>>>>>

வாழ்க்கையின் நிலைகள்!!!!!!


சுழி போட்டு ஆரம்பித்த நம் வாழ்க்கை......
கார்புள்ளியில் திக்கு முக்காடுகிறது........
அடைப்புக்குறியில் அழுகிறது.....
கேள்விக்குறியில் எழும்பிய வினாக்களுக்கு விடை தேடுகிறது.......
ஆட்சரியக்குரியில் சுக துக்கங்களை சந்திக்கிறது......
பின் முற்றுப்  புள்ளியில் முடிவடைகிறது............ 





வெள்ளி, 1 ஜூலை, 2011

கவிதை அரும்புகள்: வெற்றி தோல்வி

கவிதை அரும்புகள்: வெற்றி தோல்வி: "வெற்றி என்பது பெற்றுக் கொள்வது , தோல்வி என்பது கற்றுக் கொள்வது , முதலில் கற்றுக் கொள்வோம் , பிறகு பெற்றுக் கொள்வோம் !!"

திங்கள், 27 ஜூன், 2011

தென்றலின் லீலை இது !!!

அவளது கார்மேகக் கூந்தல் என் மார்போடு வருடி சென்றது ,
மன்னிப்புக்கோரி புன்னகைப் பூத்தால்..............பிரமித்தேன் ,
அவள் பெண் அல்ல பிரம்மன்  செதுக்கிய  சிற்பம் ........
அந்தே நொடி ,
நான் நானாக இல்லை......உணர்ந்தேன்  மாற்றங்கள் பல  என்னுள் ,


அவளுடைய கன்னத்துக் குழியில் விழப் போன நான் மனம்  இடறி கண் இமைக்கும் நொடியில் அவள் உடன் காதலில் விழுந்தேன் !!!

ஞாயிறு, 26 ஜூன், 2011

வெற்றி தோல்வி

வெற்றி என்பது பெற்றுக் கொள்வது ,
தோல்வி என்பது கற்றுக் கொள்வது ,
முதலில் கற்றுக் கொள்வோம் ,
 பிறகு பெற்றுக் கொள்வோம் !!

செவ்வாய், 21 ஜூன், 2011

காதலா மோகமா???



காதல் என்ற  சொல்லுக்கு இடம் கொடுக்காமல் இருந்தேன்-
எங்கிருந்தோ வந்தாய் .........
எனக்குள் காதல் எனும் தீயை மூட்டினாய்-அதில் நான் முழுதாக  எறிவதற்குள் நீயாகவே அணைத்து விட்டு சென்றாய் 
இதற்கு பெயர் காதலா மோகமா ???????

புதன், 15 ஜூன், 2011

காதலும் இரகசியமும்

காதலும் இரகசியமும் ஒன்றுதான்-
இரண்டுமே சொல்லப்படாத வரைக்கும்
சுகம் சுகமே.....
சொன்னதும் ரணம் ரணமே !!!!!!!

மீளவே இல்லை !!!

தென்றலாய் வந்து என்னை வருடி  சென்றவனே,
காம பர்வைக்கொண்டு என் இதயதை நெருடியவனே ,
காதல் என்ற சொல் எறிந்தாய்,
வில் போன்று  பாய்ந்து என் இதயத்தை ரணமாக்கியது ,
நீ விரித்த நேசவலையில் விழுந்தவள் நான் ,
 இன்று வரை மீளவே இல்லை !!!

காதல் கானம்



காதலா  ,
உன்னை என் இதயக் கூட்டில் பூட்டிவைத்தேன் ,
சிலந்திகளுக்கு சின்னால பெட்டி ஆவதற்கு அல்ல ,
என் இதயதுடிபோடு சேர்ந்து காதல் கானம் பாடுவதற்கு !!!!!

திங்கள், 13 ஜூன், 2011

தனிமை !!!!!

 

  

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுப்பது போல
கொடூரமாக இருந்தது உனது பிரிவு அன்று ,
தண்ணீரில் மூழ்கிய காகிதக்கப்பல் போல தத்தளித்தது  எனது கூறுகெட்ட மனம் ,
கண்களில் கங்கையை ஏந்தியவளாய் காலம் கடத்தினேன்,
தனிமையிலும் இனிமைக் காணமுடியும் என்பதனை அறிந்தேன்,
இருப்பினும் உணருகிறேன் உனது மூச்சின் வெப்பத்தை எனது கவியில் -நீ இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாய் என்னுள் !!!!!

ஞாயிறு, 12 ஜூன், 2011

பொய் பேச அறியாது

காதலி,
நான் பலமுறை உன்னிடத்தில் என் காதலை மெய்ப்பித்துவிட்டேன் ,
இன்னும் ஏன் என்னை மறுக்கிறாய் ,
வானில் மின்னும் நட்சத்திரத்தை தொடுத்து மாலையாகப்
போடுகிறேன் உன் பவள கழுத்தில் ,
கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் மறைவதற்குள் அவனை
கைப்பற்றி வைக்கிறேன் உன் காலடியில்,
என்றெல்லாம் எனக்கு பொய் பேச அறியாத காரணத்தினாலா???

பெண்ணே,
இப்படி பொய்யான நம்பிக்கையை உனக்கு கொடுக்க நான்  அலாவுதீன்  அற்புத விளக்கின் சொந்தக்காரன் அல்ல,

உன் இதயம் எனும் பூங்காவிற்கு சொந்தக்காரன் !!!

இதயத்தில் இருக்கும் நான்

நமது பெயரைக் கடற்கரை மணலில்
எழுதி வைத்தேன் -கடலலை வந்து அடித்து  சென்றது,


மரத்தில் செதுக்கிவைத்தேன்-புயல் வந்து
மரத்தை அடியோடு சாய்த்தது  

உனது கல்லறையில் எழுதி வைத்தேன் -


 
இறந்தது நீ மட்டுமல்ல உன் இதயத்தில்
இருக்கும் நானும் தான் என்பதால் .


தற்கொலை

உன்னைப் படைத்தவன் -எல்லாம் வல்ல இறைவன் ,
பத்து மாதம் சுமந்து பெற்றவள்  -தாய் ,
உன்னை மார்பில் போட்டு வளர்த்தவர் -தந்தை ,
உன்னை சிரிக்க வைத்து இரசித்தவர்கள் -நண்பர்கள் ,
இப்படியென அனைத்தையும் மற்றவர்களே
உனக்கு செய்திருக்க, ,
உன் உயிரை மாய்த்துக்கொள்ளும் சக்தியை மட்டும்
 

உனக்கு கொடுத்தவர் யார் !!! 

திருடா !!!!!!

நட்பு என்ற பெயரில் -என்  கவலையைத் திருடினாய்  ,
திருமணம் என்ற பெயரில் -என் வாழ்க்கையைத் திருடினாய் ,
மரணம் என்ற பெயரில் -என் நிம்மதியை திருடினாய் ,  
இன்னும் என் உயிரை  மட்டும் ஏன் விட்டுவைத்துதிருக்கிறாய்?
திருடிசெல் -மரணத்துக்குப் பின்பும் என்வாழ்க்கை உன்னோடுதான்.......