கொடூரமாக இருந்தது உனது பிரிவு அன்று ,
தண்ணீரில் மூழ்கிய காகிதக்கப்பல் போல தத்தளித்தது எனது கூறுகெட்ட மனம் ,
கண்களில் கங்கையை ஏந்தியவளாய் காலம் கடத்தினேன்,
தனிமையிலும் இனிமைக் காணமுடியும் என்பதனை அறிந்தேன்,
இருப்பினும் உணருகிறேன் உனது மூச்சின் வெப்பத்தை எனது கவியில் -நீ இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாய் என்னுள் !!!!!



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக