திங்கள், 27 ஜூன், 2011

தென்றலின் லீலை இது !!!

அவளது கார்மேகக் கூந்தல் என் மார்போடு வருடி சென்றது ,
மன்னிப்புக்கோரி புன்னகைப் பூத்தால்..............பிரமித்தேன் ,
அவள் பெண் அல்ல பிரம்மன்  செதுக்கிய  சிற்பம் ........
அந்தே நொடி ,
நான் நானாக இல்லை......உணர்ந்தேன்  மாற்றங்கள் பல  என்னுள் ,


அவளுடைய கன்னத்துக் குழியில் விழப் போன நான் மனம்  இடறி கண் இமைக்கும் நொடியில் அவள் உடன் காதலில் விழுந்தேன் !!!

ஞாயிறு, 26 ஜூன், 2011

வெற்றி தோல்வி

வெற்றி என்பது பெற்றுக் கொள்வது ,
தோல்வி என்பது கற்றுக் கொள்வது ,
முதலில் கற்றுக் கொள்வோம் ,
 பிறகு பெற்றுக் கொள்வோம் !!

செவ்வாய், 21 ஜூன், 2011

காதலா மோகமா???



காதல் என்ற  சொல்லுக்கு இடம் கொடுக்காமல் இருந்தேன்-
எங்கிருந்தோ வந்தாய் .........
எனக்குள் காதல் எனும் தீயை மூட்டினாய்-அதில் நான் முழுதாக  எறிவதற்குள் நீயாகவே அணைத்து விட்டு சென்றாய் 
இதற்கு பெயர் காதலா மோகமா ???????

புதன், 15 ஜூன், 2011

காதலும் இரகசியமும்

காதலும் இரகசியமும் ஒன்றுதான்-
இரண்டுமே சொல்லப்படாத வரைக்கும்
சுகம் சுகமே.....
சொன்னதும் ரணம் ரணமே !!!!!!!

மீளவே இல்லை !!!

தென்றலாய் வந்து என்னை வருடி  சென்றவனே,
காம பர்வைக்கொண்டு என் இதயதை நெருடியவனே ,
காதல் என்ற சொல் எறிந்தாய்,
வில் போன்று  பாய்ந்து என் இதயத்தை ரணமாக்கியது ,
நீ விரித்த நேசவலையில் விழுந்தவள் நான் ,
 இன்று வரை மீளவே இல்லை !!!

காதல் கானம்



காதலா  ,
உன்னை என் இதயக் கூட்டில் பூட்டிவைத்தேன் ,
சிலந்திகளுக்கு சின்னால பெட்டி ஆவதற்கு அல்ல ,
என் இதயதுடிபோடு சேர்ந்து காதல் கானம் பாடுவதற்கு !!!!!

திங்கள், 13 ஜூன், 2011

தனிமை !!!!!

 

  

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுப்பது போல
கொடூரமாக இருந்தது உனது பிரிவு அன்று ,
தண்ணீரில் மூழ்கிய காகிதக்கப்பல் போல தத்தளித்தது  எனது கூறுகெட்ட மனம் ,
கண்களில் கங்கையை ஏந்தியவளாய் காலம் கடத்தினேன்,
தனிமையிலும் இனிமைக் காணமுடியும் என்பதனை அறிந்தேன்,
இருப்பினும் உணருகிறேன் உனது மூச்சின் வெப்பத்தை எனது கவியில் -நீ இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாய் என்னுள் !!!!!

ஞாயிறு, 12 ஜூன், 2011

பொய் பேச அறியாது

காதலி,
நான் பலமுறை உன்னிடத்தில் என் காதலை மெய்ப்பித்துவிட்டேன் ,
இன்னும் ஏன் என்னை மறுக்கிறாய் ,
வானில் மின்னும் நட்சத்திரத்தை தொடுத்து மாலையாகப்
போடுகிறேன் உன் பவள கழுத்தில் ,
கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் மறைவதற்குள் அவனை
கைப்பற்றி வைக்கிறேன் உன் காலடியில்,
என்றெல்லாம் எனக்கு பொய் பேச அறியாத காரணத்தினாலா???

பெண்ணே,
இப்படி பொய்யான நம்பிக்கையை உனக்கு கொடுக்க நான்  அலாவுதீன்  அற்புத விளக்கின் சொந்தக்காரன் அல்ல,

உன் இதயம் எனும் பூங்காவிற்கு சொந்தக்காரன் !!!

இதயத்தில் இருக்கும் நான்

நமது பெயரைக் கடற்கரை மணலில்
எழுதி வைத்தேன் -கடலலை வந்து அடித்து  சென்றது,


மரத்தில் செதுக்கிவைத்தேன்-புயல் வந்து
மரத்தை அடியோடு சாய்த்தது  

உனது கல்லறையில் எழுதி வைத்தேன் -


 
இறந்தது நீ மட்டுமல்ல உன் இதயத்தில்
இருக்கும் நானும் தான் என்பதால் .


தற்கொலை

உன்னைப் படைத்தவன் -எல்லாம் வல்ல இறைவன் ,
பத்து மாதம் சுமந்து பெற்றவள்  -தாய் ,
உன்னை மார்பில் போட்டு வளர்த்தவர் -தந்தை ,
உன்னை சிரிக்க வைத்து இரசித்தவர்கள் -நண்பர்கள் ,
இப்படியென அனைத்தையும் மற்றவர்களே
உனக்கு செய்திருக்க, ,
உன் உயிரை மாய்த்துக்கொள்ளும் சக்தியை மட்டும்
 

உனக்கு கொடுத்தவர் யார் !!! 

திருடா !!!!!!

நட்பு என்ற பெயரில் -என்  கவலையைத் திருடினாய்  ,
திருமணம் என்ற பெயரில் -என் வாழ்க்கையைத் திருடினாய் ,
மரணம் என்ற பெயரில் -என் நிம்மதியை திருடினாய் ,  
இன்னும் என் உயிரை  மட்டும் ஏன் விட்டுவைத்துதிருக்கிறாய்?
திருடிசெல் -மரணத்துக்குப் பின்பும் என்வாழ்க்கை உன்னோடுதான்.......
 

வேடிக்கை

 
நான் உன்னை காதலிப்பது யாருக்கும்
தெரியக்கூடாது என்று நினைத்தேன் ,
இறுதியில் உனக்கே தெரியாமல்
போனதே காதலி !!!!!!!

கலியுகம்

ஆயிரம் மெய்களை சொன்னேன் ,
அவள் என்னை உதாசினப்படுதினால் ,  
ஒரே ஒரு பொய் சொன்னேன் ,
இன்று அவள் என் அரவணைப்பில்


வியாழன், 9 ஜூன், 2011

கண்ணாடி

பெண்ணே,
உன்னை காதலிக்க  ஆரம்பித்தவுடன் ,
என் வீட்டு கண்ணாடிக்குட போய்ப்பேசக் கற்று கொண்டது.........
என் உருவத்திற்குப்  பதிலாக உன்  பிம்பங்களையே காட்டுகிறது
என்ன மாயையோ !!! 

காதல் வேண்டாம்

காதலித்துப்பார் கவிதை வரும் என்றனர்,
நானும் காதலித்தேன்,
கவிதையோடு சேர்ந்து  கண்ணீரும் வந்தது!!!!!!!  

காதலி

காதலி,
என் அருகே அமர்ந்து அழுகிறாய்,
உன் கண்ணீரைத் துடைக்க என் கரம் நீளுகிறது,
நான் செத்து கிடக்கிறேன் என்பதை மறந்து!!!!

சாவிலும் ஒன்றிணைந்த இதயம்

நமது காதல் காவியம் தொடங்கியவிடம் பள்ளியறையில்,
உனக்கு நான் எனக்கு நீயென்று நிர்ணயிக்கப்பட்டது நமது தாயின் கருவறையில் ,
மனைவியென்ற ஸ்தானத்தைக் கொடுத்து உன்னை நான் கரம் பிடித்தேன்
மணவறையில் ,
கண்டேன் உனது உயிரற்ற உடலை பிணவறையில் ,
நான் திலகமிட்டு இரசித்த  நெற்றியை அலங்கரித்தனர் இருபது காசு சில்லறையில் ,
ஈவு இரக்கமின்றி  தகனம் செய்தனர் உன்னை தன்னந்தனியாக கல்லறையில் ,
சாவிலும் உனக்கு துனைகொடுக்க வருகிறேன்,
எனது உயிர் இருக்கிறது நிலுவையில் !!!!!! 

பூவே !!

பூவே,
பூத்துக் குலுங்கும் போது சிரிக்கிறாய்,
பெண்களின் கூந்தலில் ஒய்யாரமாக அமர்ந்தபடி  சிரிக்கிறாய்,
இறைவனின் பாதசுவடுகளிலும் சிரிக்கிறாய்,
கல்லறையிலும் சிரிக்கிறாய்,
வியக்கிறேன் நான் !!!!!!!!
சாகா வரம்போன்று நீ சாவிலும் சிரிக்கும் வரம் 
பெற்று வந்தாயோ  என்று...........  

மரணம்

இறுதி மூச்சு வரை உடன் வருவேன் என்றாய்,
வெறும் ஞாபகங்களாக மட்டும்தான் என்று,
உன் மரணத்திற்கு பிறகுதான் நான் உணர்ந்தேன் !!!

ஐயோ பாவம் !!!

இன்பம் தென்றலாய் வந்து என்னை
 தீன்டி சென்றது ,
துன்பம் ஐயோ பாவமென்று, 
என்னுடனே தங்கியது  !!!  

சாதனை

தோல்வியை எண்ணி துவண்டு விடாதே!
100  வெற்றிகளைக் குவித்தவன் அல்ல,
1000 தோல்விகளை  சந்தித்தவன்தான்,
அந்த  தாமஸ் அல்வா எடிசனும்.......
அன்று அவன் பின்வாங்கிருந்தால்,
இன்று நம் வாழ்க்கை இருட்டறைக்குள்தான்.   

காதல் கீதம்

பூவென நீயிருந்தாய்,
வண்டாக அவதரித்தேன் நான்
ரிங்காரெமிட்டு உன்னையே சுற்றி வந்தேன்,
அது வெறும் ரிங்காரம் அல்ல,
எனது காதல் கீதம் !!! 

சொந்தம் அல்ல...!!!

காதலனே,
உன் பாத சுவடு புதைந்த கால்
தடத்தை நான் பின் தொடர்ந்தேன்,
உன் நிழல்குட எனக்கு சொந்தமானது அல்ல
என்று அறிந்ததும் ஒதுங்கி சென்றேன்...........

நட்பு

நண்பா,
நம் நட்பு என்பது ஒரு நந்தவனம் போன்றது,
அதில் நீ ரோஜாவாக இருந்தால் நான் முற்களாய்
மாறி உன்னை பாதுகாப்பேன்,
நீ   முற்களாய் மாறி என்னை குத்தினால்,
நான் மறுகணமே கிளைகளாக   மாறி
உன்னை தாங்குவேன்!  

அம்மா

http://www.youtube.com/watch?v=pixz3Pd0KiE
என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் முதலில் சுவாசிக்கும்
மூன்றெழுத்து கவிதை அம்மா,
அம்மா,
மூன்றேழுத்தில் உருவேடுத்தாய் நீ ,
எனக்குள்ளே மூன்றெழுத்து உயிர் ஆகின்றாய்!
பத்து மாதம் என்னை மட்டும்தான் வயிற்றில் 
சுமந்தாய் என்று நினைத்தேன்!
அனால் நீயோ ஒரு படி மேலேசென்று
கஷ்டங்கள்  வேதனைகள் யாவையும் சுமந்தாய்
அம்மா நீ ஒரு சுமைதாங்கி
உன் வயிற்றில் நான் உதைத்தேன்,
ஆனந்தக் கண்ணீர் சிந்தினாய்!

நீ பெற்றக் குழந்தை நான்,


ஒரு போதும் உதைக்கமாட்டேன்!
உன் நெஞ்சில் அம்மா !